எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக,தவெக, இடதுசாரிகள் வெளிநடப்பு

எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக, தவெக, இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, எஸ்ஐஆரை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி கட்சிகளான தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதனைத்தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்து விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். மேலும் நாம் தமிழர், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன.

நாடு முழுவதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பெரும்பாளான கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *