மலையடிப்பட்டியில் அகழாய்வு பணி: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மலையடிப்பட்டியில் அகழாய்வுப் பணிகளை தவெக அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை14) அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன்.

மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் கண்டுபிடிப்பு, இப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.

வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் நிலப்பரப்பின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவை மேற்கோள் காட்டி அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *