ஷாக்… தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஏப்ரல் 29-ம் தேதி விலை குறைந்து விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும்.விற்கப்பட்டது நேற்று காலை கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு .400 ரூபாயும் குறைந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் தங்கம் கிராமுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1,040 ரூபாயும் சரிந்தது இதனால் ஒரு கிராம் தங்கம் .13 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 2) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 14,000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 1,12,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2,70,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்ற இறக்கம் நகைப்ரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *