தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொள்ளாத ஆளுநர்: தவெக கண்டனம்

ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய்

தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம் என்று தவெக கூறியுள்ளது.

இது தொடர்பாக தவெக ஐடி விங்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *