தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநருக்கு அதிமுகவில் பதவி

அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக இலக்கிய அணியின் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். இவர் கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் அதிமுக இலக்கிய அணி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பழனிசாமியை சந்தித்து விசயராகவன் வாழ்த்து பெற்றார். எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு, இப்போது தான் இலக்கிய அணிக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் விசயராகவன். தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி கழக இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *