அரசியலை கடந்து இஸ்லாமிய மக்களுக்கு துணை நிற்போம்: மு.க.ஸ்டாலின்!

இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்.

‘தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்’ என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *