
நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” நீங்கள் நான் முதல்வன் சமூக வலைதள பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை டெலிட் (delete) செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் (Delete) செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக ஆர்சிவ் (Archive) செய்யப்பட்டுவிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் ‘படிங்க, படிங்க, படிங்க’ என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.



