
நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தனது தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் உயர்கல்வி த்துறைஅமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது ‘காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்கிற கதையாக இருக்கிறது.
மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்எஸ்எஸ்சின் போதகர் கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ்சின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது. பெ.விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்சின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்” என்று தெரிவித்துள்ளார்.



