சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம்: பட்டய பொறியாளர் சங்கம் முடிவு

பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பட்டய பொறியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பொதுநலன் சார்ந்த வெளிப்படையான பொறியாளர் பணியிட மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக இருந்து வருகிறது இதுகுறித்து கடந்த மார்ச் 2026-ல் நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட அலுவலர்களை நிர்வாகிகள் சந்தித்தபோது சட்டமன்றத் தேர்தலை காரணம் தெரிவித்து தேர்தல் முடிந்ததும் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்கள்.

ஆனால், தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பு ஏற்று இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இதுவரையில் உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் பணியிட மாறுதல் நேர்மையாக நடைபெறவில்லை. தலைமை பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர் கோட்ட பொறியாளர் உதவி கோட்ட பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. முதுநிலை வரை தொழில் அலுவலர் வரை தொழில் அலுவலர் இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு வழங்கப்படவில்லை. வரை தொழில் அலுவலர் இளநிலை வரை தொழில் அலுவலர் சாலை ஆய்வாளர் நிலை 1 பணியாளர்ளுக்கு இளநிலை பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

பட்டய கல்வித்தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களுக்கு மற்றும் சாலை பணியாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 11-08-2026 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கம் சார்பாக சென்னையில் உள்ள நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *