
எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா என்று அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை திருநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “ எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் சேர்ந்து பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் குறித்து குறை கூறிய டி.டி.வி.தினகரன், அவரை முதலமைச்சராக முயற்சி செய்தார். டிடிவி தினகருடன் 50 ஆண்டுகள் பயணித்த கட்சியினர் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா? இதைவிட கேவலமான அரசியல் ஒன்றுமில்லை. டி.டி.வி.தினகரனுக்கு எல்லாம் புரியும், அவர் காலத்திற்கேற்றவாறு தண்ணீர் போவது போல் செல்கிறார். கரூர் சம்பவத்தின் உயிரிழப்புகள் எஸ்.பிக்குத் தெரியவில்லை. ஆனால் முதலில் செந்தில் பாலாஜி வருகை தந்தார்” என்று தெரிவித்துள்ளார்.



