
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு ‘சிறப்பு படை’யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு. சமூகநலத் துறை சார்பில் ஏற்கெனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு ‘சிறப்பு படை’ உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத ‘சிறப்பு படை’ இருந்து என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



