ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்: அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்: அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் செப்.3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 1) அமைச்சர் வெங்கட்ரமணன் பேசுகையில், “ ஜூலை 6-ம் தேதி நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருள் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த விலை கண்காணிப்புக் குழு கூடுவது என்றும், தேவைப்படும் நேர்வுகளில் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து அப்பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாரா வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. இதே நேரத்தில் இதற்கு முந்திய ஆட்சி காலங்களில் இந்த விலை கண்காணிப்பு குழு கூட்டமானது ஐந்து ஆண்டில் இரண்டு முறை மட்டுமே, அதாவது நவம்பர் 2023 மற்றும் ஏப்ரல் 2024 மட்டுமே கூட்டப்பட்டது.

தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலையேற்றத்தால், போக்குவரத்து செலவுகள் உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலையின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்வு விலை ரூ.56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், மக்களின் நலன் காக்கும் அரசு தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டுமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்க அரசு முடிவு செய்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு நகரப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகரப்புற பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நகரப் பகுதியில் அமைந்துள்ள 8,739 நியாயவிலை கடைகள் மூலம் 80 லட்சம் குடும்பத்தார்களுக்கு 3.9.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் வீதம் வழங்கப்படும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *