இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்… பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஹரியாணா மாநிலம், ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையம் வரை மாணவர்கள் பயணம் செய்தனர். இவ்விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியாணா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதலமைச்சர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ரூ.14,700 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்சித் திட்​டங்​கள், பல்​வேறு திட்​டங்​களுக்கு பிரதமர் மோடி அடிக்​கல் நாட்டினார். தொடர்ந்து, ஹரியாணா​வில் ரூ.12,470 கோடி, சண்டிகரில் ரூ.4,700 கோடி, பஞ்சாபில் ரூ.5,470 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித்​ திட்டங்களையும் பிரதமர் தொடங்​கி வைத்தார். “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *