
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இடம் மாறியது குறித்து செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நேபாள வெள்ள விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கிறது என்ற தகவலை முதலமைச்சர் விஜய் சேகரித்து வருகிறார். டெல்லிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் அனுப்பி தமிழர்களின் வருகையை இந்திய அரசுடன் இணைந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பதை அறிந்து வருகிறார்.
சட்டப்பேரவையில் அவர் அருகில் அமர்ந்து என்ன பேசினார் என்பதை சொல்வது முறையாக இருக்காது. எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார். ஒரு முதலமைச்சர் இந்த அளவிற்கு நடந்து கொண்டு இருக்கிறார் என்ற நிலை மாறி, ஒரு மாற்றத்தை எல்லோரும் சேர்ந்து உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காக அருகில் அமர்ந்திருக்கிறார்.
சட்டமன்ற நடவடிக்கையினை வீ த லீடர் அமைப்பினர் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்த கருத்துக்கு பதிலளிக்க முடியாது. அது தேவையற்ற ஒன்று. மக்கள் நலன் காக்கும் வகையில் இந்த அரசு பணியாற்றி வருகிறது. எங்கள் நோக்கம் தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேறுவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தவெக ஆட்சிக்கு வந்து குறிப்பிட்ட நாட்கள் தான் ஆகியிருக்கிறது.
கரும்புக்கு 4,000 ரூபாய் கொடுத்து இருக்கிறோம், இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. நெல்லுக்கு 257 ரூபாய் உயர்த்தி கொடுத்து இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் அல்லது 70 ரூபாய் கொடுப்பார்கள், திமுக ஆட்சியில் 70 ரூபாய் அல்லது 100 ரூபாய் தான் கொடுப்பார்கள். இது விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக இருக்கிறது. இருக்கும் நிதியை வைத்து இந்த அளவுக்கு விவசாயிகளுக்கு செய்து வருகிறோம்” என்றார்.



