பொது பணியிட மாறுதல்: நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை அமைச்சர் ஏமாற்றலாமா?

கலந்தாய்வு மூலம் பொது பணியிட மாறுதல் வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொறியாளர்களை ஏமாற்றலாமா என்று பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாடு அரசு சார்பில் அதிரடியாக பல்வேறு துறைகளில் அதிகாரிகளை பணியிட மாறுதல் வழங்கியதாக செய்திகள் வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையிலும் நேர்மையாக பொது பணியிட மாறுதல் நடைபெறும் என்று அமைச்சர், சங்க நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார். ஆனால், தற்போது விருப்ப மாறுதல் மட்டும் கேட்டு பொறியாளர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பல வருடங்களாகவே ஒரே மாவட்டத்திற்குள் மாறி மாறி பணியிடத்தை மாற்றி கொண்டும், அருகே இருக்கும் மாவட்டத்திற்கும் மாறிக்கொண்டும் வசதியாக இருக்கும் பொறியாளர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வேதனையை வெளியே சொல்ல முடியாமல் பொது பணியிட மாறுதல் நடக்கும் என எதிர்பார்த்த பொறியாளர்கள் கடுமையான மனஉளைச்சலோடு உள்ளனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொது பணியிடமாறுதல் பொறியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை உடனடியாக எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்படும் பொறியாளர்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *