திமுக முன்னாள் அமைச்சருக்கு சம்மன்… பணமோசடி புகாரில் போலீஸ் அதிரடி

அரசு வேலை வாங்கி தருவதாக திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ சீனிவாசன் என்பவர் காவல் ஆணையகரத்தில் புகார் அளித்தார் அதில், ” எனது மகனுக்கு போக்குவரத்து துறையில் அரசு வேலை பெற்று தருவதாக கூறி அப்போதைய அமைச்சராக இருந்த சிவசங்கர் ரூபாய் 23 லட்சம் பணம் கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்டு, தற்போதைய அமைச்சராக இருந்த சிவசங்கரின் நெருங்கியவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இளஞ்செழியன் என்பவரின் வங்கி கணக்கில் அந்த தொகையை நான் செலுத்தினேன்.

பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரி நேரில் சந்திக்கவும் இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார். அப்போது என் மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதியாகிவிட்டது .எந்த கவலையும் வேண்டாம் விரைவில் பணி நியமன ஆணை உங்களுக்கு கிடைக்கும் என்று அப்போதைய அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். மேலும் நான் வாங்கிய பணம் தன்னிடம் வந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், இதுவரை தன்னுடைய மகனுக்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்ட போது சரியான பதில் வரவில்லை. தொடர்ந்து அழைகழிக்கப்பட்டேன். மேலும் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு இதுவரை வேலை வழங்காமல் இளஞ்செழியனும், அமைச்சர் சிவசங்கரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளஞ்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு வேலை மோசடி புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல திமுக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலு டெண்டர் முறைகேட்டில் ஊழல் செய்துள்ளதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் மோசடி புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *