மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் டி. பிரபுஷங்கர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர சுகாதாரத்துறை இணை ஆணையர் ஜெயசீலன், சுற்றுலாத்துறை இயக்குநராகவும் தமிழக சுற்றுலாத்துறை வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையர் பொன்மணி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும், . இன்னசன்ட் திவ்யா, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராகவும், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநரான கவிதா ராமு, டுபிட்கோ நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரான டி. மோகன், பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஷ்ரேயா பி சிங், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரமண சரஸ்வதி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *