தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகல்

தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகல்

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசல. இவர் அதிமுகவில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்தவர். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதே போல 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு
டெபாசிட் இழந்தார்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைந்தார். அவருக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு அளித்தது. ஆனால், தேர்தலில் அவர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், அவர் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தோப்பு வெங்கடாசலம் பெருந்துறையில் இன்று (ஆகஸ்ட் 31) செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்ளும் கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க இருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து மாவட்டக் கழக பொறுப்பாளராகவும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

​ஆனால், சட்டப்பேரவை தேர்தலின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் திமுகவில் பயணிக்க என் மனம் இடம்கொடுக்காத காரணத்தால், எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லக்கூடிய எண்ணம் எனக்கு இல்லை. நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தவறான செய்தியை சில ஊடகங்கள் ஒரு வார காலமாக பரப்பி வந்தார்கள். ஒதுங்கும் அளவுக்கு நான் பற்றற்றவனும் கிடையாது; ஒதுக்கப்படுகிற அளவுக்கு நான் சத்தவற்றவனும் கிடையாது. தற்போதைக்கு எந்த இயக்கத்திலும் சேருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு அந்த மனநிலையில் நான் இல்லை ” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *