பத்திரிகையாளர் விஜயனுக்கு அச்சுறுத்தல்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல என்று மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

புதிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்யும் தமிழ்நாடு காவல்துறைக்கு கட்சித்தவைர்க சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினரும், மமக தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு என்பது எப்போதுமே கருத்துச் சுதந்திரத்திற்கும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் உலகளவில் பெயர் பெற்ற ஒரு புண்ணிய மண்ணாகும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களை, விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தி மௌனமாக்க நினைக்கும் முயற்சிகள் ஒருபோதும் எந்தவொரு அரசுக்கும் நல்ல பெயரைத் தேடித்தந்துவிடாது.

புதிய தலைமுறை நெறியாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவரது அலைபேசியை (செல்போன்) எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அவரிடம் திருப்பி வழங்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சுதந்திரத்தில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *