தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் வெற்றி

தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர்6-ம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு வந்தது.

தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,22,434 வாக்குகளில்1,79,337வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தச் சூழலில், தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை (57,370) வீழ்த்தினார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 21 சுற்றுகள் நிறைவில் தவெக 70 ஆயிரத்து 916 வாக்குகளும், திமுக 51 ஆயிரத்து 675 வாக்குகளும், அதிமுக 46 ஆயிரத்து 431 வாக்குகளும் பெற்றன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *