தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தொடர்ந்து வெற்றி முகம்

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் 110 இடங்களில் முன்னணி வகிக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகிறது. காலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இருந்தே நடிகர் விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது. முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ள இந்த கட்சி நகர்ப்பகுதிகளில் அதிக தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

பகல் 2 மணி நிலவரப்படி, தவெக 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 59, திமுக 48, பாமக 5, காங்கிரஸ் 4, சிபிஐ 2, முஸ்லிம் லீக் 1, மார்க்சிஸ்ட் 2, அமமுக 1, விசிக 1, தேமுதிக 1, பாஜக 1 ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *