என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?… ‘ஜனநாயகன்’ படம் பார்த்து அழுத தவெக அமைச்சர்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஒருபுறம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்க விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் பார்க்க அமைச்சர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், செய்யக்கோரியும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என பல்வேறு நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வீரஞ்செறிந்த போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை தமிழக வெற்றிக் கழக அரசின் போலீஸார், அடக்குமுறையை ஏவி கைது செய்து வருகின்றனர். கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்கு தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ’ஜனநாயகன்’ இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய் என்பதற்குப் பதிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்றும், சட்டப்பேரவையில் அவர் காட்டிய சைகையும் டைட்டில் காஇடம்பெற்றிருந்தன. விஜய் நடித்த படத்தை பார்க்க தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்களுக்கு அமைச்சர்கள் படையெடுத்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துஅமைச்சர் முகமது பர்வேஸ் கண்ணீர் விட்டு குலுங்கி குலுங்கி அழுதார். விஜய்யின் கடைசி படம் என்பதால் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ரோகிணி திரையரங்கில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண் ராஜ், தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில் அமைச்சர் ஸ்ரீநாத், போத்தனூர் அரசன் திரையரங்கில் அமைச்சர் விக்னேஷ் உள்ளிட்டோர் ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். முன்னதாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூலை 22) பார்த்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *