தேசிய நல்லாசிரியர் விருது: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும். நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *