
தவெக தலைவர் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி தவெக 107, திமுக 75, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்க்கின்றன.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 44,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல திருச்சி கிழக்குத் தொகுதியில் 26,432 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



