
பாஜகவில் இருந்து விலகி விஜயதரணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.
கன்னியாகுமரியில் உள்ள விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2011, 2016, 2021-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. இவர் தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் தலைவராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், திடீரென 2024-ம் ஆண்டு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் நான்காவது முறையாக விஜயதரணி போட்டியிட்டார். இதில் தவெக வேட்பாளர் கே.மைக்கேல் குமார் 20970 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் விஜயதரணி அதிர்ச்சியடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை வெற்றி பெற்ற விஜயதரணி கட்சி மாறிச் சென்றதால் அவரது செல்வாக்கு சரிந்தது. ஆனால், பாஜக நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்று விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். அவருக்கு பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்ற கோபமும் அவருக்கு இருந்தது.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி விஜயதரணி பாஜகவில் இன்று இணைய உள்ளார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு அவர் வந்துள்ளார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பால கங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் அதிமுக., அமமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



