திருச்சி மாநாட்டில் புதிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் உள்ள சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று 3 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெற உள்ளது.
ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற தலைப்​பில் இந்த மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. இதற்​காக திமுக முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான கே.என்​.நேரு தலை​மை​யில் பிரம்​மாண்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன

இம்மாநாட்டிற்காக 650 ஏக்கர் பரப்பளவில் 9 நுழைவாயில்களுடன் பிரமாண்ட மாநாட்டு மேடை மற்றும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200 ஏக்கரில் தொண்டர்கள் அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் 50,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 15 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்​களுக்கு செல்​வதற்​காக மேப்​புடன் கூடிய க்யூஆர் கோடு அனுப்​பப்​பட்​டுள்​ளது. இதனை செல்​போனில் ஸ்கேன் செய்​தால், வாகன நிறுத்​தும் இடங்கள் தெரியும்​. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

மேலும் மாநாட்​டுத் திடலில் 168 இடங்​களில் எல்​இடி திரைகள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. 3.60 லட்​சம் நாற்​காலிகள் போடப்​பட்​டுள்​ளன. 48 நுழைவு​வா​யில்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மாநாட்​டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்​டில் அடங்​கிய பை வழங்​கப்​படு​கிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்​சம் பேருக்கு உணவு வழங்​க​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ரமலான் நோன்பு காலம் என்​ப​தால், முஸ்​லிம்​கள் தொழுகை நடத்த வசதி​யாக தனி அரங்கும் அமைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் இன்று திருச்சி வரு​கிறார். மாநாட்டு வளாகத்​தின் முகப்பில் உள்ள 100 அடி உயரகொடிக்​கம்​பத்​தில் கட்​சிக் கொடியை ஏற்​றுகிறார். மாநாட்டு அரங்​குக்​குள் காரில் நின்​ற​வாறு நிர்​வாகி​கள் அளிக்​கும் வரவேற்பை ஏற்​றுக் கொண்​ட​வாறே மாநாட்டு அரங்​குக்​குள் செல்​கிறார். அங்கு அவர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டைப்போல இந்த மாநாட்​டிலும் முக்​கிய அறி​விப்​பு​களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி​யிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *