
லால்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லால்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், திடீரென மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



