எடப்பாடி தொகுதியில் விஜய் எடுத்த திடீர் முடிவு: டிவி சின்னத்திற்கு திடீர் மவுசு

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுததப்பட்டனர். இதில் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார். ஆனால் அருண்குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவர் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அருண்குமார் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்,” எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அருண்குமாரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் இன்று (ஏப்ரல் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான்.

நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர்கூ. பிரேம்குமார் அவர்களை, மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *