திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வீடியோ வெளியிட்ட அசாதுதீன் ஓவைசி

திமுக கூட்டணிக்கு செலுத்துமாறு வாக்காளர்களுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள வீடியோவில், ” அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம் ) கட்சியின் சார்பாக, இந்த வீடியோ செய்தி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், உங்கள் பொன்னான வாக்குகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுடன் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வக்கீல் அகமது ஏற்கெனவே திமுக கூட்டணிக்கு ஆதரவை அறிவித்துள்ளார். மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன், திமுக கூட்டணிக்கும், குறிப்பாக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கும் உங்கள் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மிக்க நன்றி” என்று பேசியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *