நிலக்கரி கொள்முதலில் முறைகேடா?… முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மாயம்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர்கள் குறித்த 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மின்வாரியம் சார்பில் நிலக்கரி கொள்முதல் செய்தது தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 16, 17 தேதிகளில் ஹார்டு ஸ்டிக்குகள் திருட்டு நடந்துள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிக முக்கிய ஆவணங்கள் அடங்கிய டெண்டர் விஷயங்கள் குறித்த ஹார்டு டிஸ்க்குகள் மாயமான விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *