
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிலவி வந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் புதிய தலைவரும், 4 புதிய ஆணையர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தகவல் ஆணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக எஸ்.மகாலட்சுமி, டி.கே.ஷபீர், சி பி.மீனா, பி. மகாலிங்கம் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் தங்களது பதவியை ஏற்கும் தேதியிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை இந்த பதவியில் நீடிப்பர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது



