ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் குறி வைத்துள்ளன: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை நோக்கி 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகமேனியின் உடல் ஜூலை 9-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்யக் கோரும் முழக்கங்கள் ஒலித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவிடன் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ என்னைப் படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் அரசாங்கம் துணிந்தால், அதனைத் தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பாய்ந்து வரும் வகையில், 1000 ஏவுகணைகள் ஈரானை நோக்கித் தயார் நிலையில் குறிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்து அழிப்பதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டன; இதற்கான முழுத் திறனும் விருப்பமும் தயார்நிலையும் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *