கோஷ்டி பூசலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளராததற்கு காரணம்: ராகுல் காந்தி ஒப்புதல்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்குப் பிரதான காரணம் உட்கட்சிப் பூசல் தான் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான
கடற்கரை விடுதியில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி இன்று (ஆக.1) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவருக்கு மாநில தலைவர் மாணிக் தாகூர் உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், ” தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாகச் செயல்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்கு உட்கட்சிப் பூசல்களும், பல்வேறு அணிகளாகக் நிர்வாகிகள் தனித்து இயங்குவதுமே பிரதான காரணமாகும். அத்துடன் உட்கட்சிப் பிரச்னைகளே காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன. அரசியல் களத்தில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும். அதற்கு அனைவரும் கோஷ்டிப் பூசல்களை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளோம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *