
லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார். அவரை பிரிட்டன் தமிழ்ச் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன் உள்பட பலர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து 85 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கி யுட்வ் அறைகள் கொண்ட ‘ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ ஹோட்டலுக்கு விஜய் சென்றார். அங்கு அவர் தங்குகிறார். பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 12) செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் நடிகர் அஜித்குமாருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது.



