பாஜக, தேர்தல் ஆணையம் சேர்ந்து கட்சியை உடைக்கின்றன: ராகுல் காந்தி புகார்

பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து கட்சியை உடைக்கின்றன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக அந்த கட்சியின் பெயரையும், அந்த கட்சியின் சின்னத்தையும் இருதரப்பினரும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “முதலில் சிவசேனா, பிறகு என்சிபி, இப்போது திரிணமூல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து ஒரு கட்சியை உடைக்கின்றன. பின்னர் அதன் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.

ஒரு முழு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுவதும் ஆச்சரியமான விஷயமல்ல. வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டன. மக்கள் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு. ஆனால், அதற்கு மாறாக, மக்களின் முடிவையே சீர்குலைக்கும் சக்திகளுக்கு அது உதவி செய்கிறது.

இந்தப் போராட்டம் பானர்ஜி அவர்களுடையது மட்டுமல்ல. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சியின், ஒவ்வொரு வாக்காளரின் போராட்டமும் ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *