
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 71 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் மட்டும் 11 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் 17,348 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுதவிர 4,653 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் எனும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.



