
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவு இசையமைப்பாளர் தேவாவையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக பாதித்திருந்தது. அந்த துயரம் மறைவதற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவா மாரடைப்பால் காலமானார். தேவாவின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு அஞ்சலி செலுத்தியது.
தமிழக முதலமைச்சர் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் மரியாதையுடன் தேவாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. தேவா இறந்த சோகம் மறையும் முன்பே அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர்
மறைந்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தேவாவின் சகோதரரும் , தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளரான சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ் இன்று (அக்.20) காலையில் காலமானார் , அவருக்கு வயது 37 .
இவர் தம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்கிற அறிவிப்பை குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



