மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்தன்று பேருந்துகளில் கட்டணம் வசூல்: மதுரையில் அதிர்ச்சி

காந்தி பிறந்த நாளான்று அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரையில் பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிததாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தது.

அதன்படி காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் படி முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, ‘‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப்பேருந்துகள் (Mofuasi Ordinary) மற்றும் 40 கிமீக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 12,602 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 17,882 பேருந்துகள் (60 சதவீதம்) மொத்த 1,94,643 நடைகளில் 1,65,312 நடைகள் 155 சதவீதம்) இயக்கப்படும் நாளொன்றுக்கு சுமார் 84:32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், வெற்றிப் பயண பேருந்துகளில் காந்தி பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காலை 8.56 மணி வரை மதுரையில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடத்துநர்களிடம் பெண்கள் கேட்டதற்கு, இது கட்டணப்பேருந்து என்றனர், சரி, பெண்களுக்கு இலவசப் பயணம் தானே என்று மீண்டும் அவர்கள் கேட்டனர்.ஆனால், அதற்கு நடத்துநர்கள், எங்களுக்கு இதுவரை உத்தரவு வரவில்லை. (காலை 8.56 மணி பயணச்சீட்டில் பதிவாகியுள்ள நேரம்). அத்துடன் சாப்ட்வேர் டவுன்லோடு ஆகவில்லை என்றனர். பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது இதுகுறித்து ஓட்டுநர் ஒருவர் அளித்த விளக்கம் என்னவென்றால், முதலமைச்சர் விஜய், மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அதாவது பிற்பகலுக்கு பின்னர் தான் இலவசம் என்றார்.

பொதுவாக சாதாரண பேருந்துகளில் மதுரை பெரியார் நிலையத்திற்கு 7 ரூபாய் தான் கட்டணம். ஆனால், இன்று (அக்டோபர் 2) பயணம் செய்தவர்களிடம் 10 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு, ஒவ்வொரு பேருந்திலு ஒவ்வொரு கட்டணம். இந்த பேருந்தில் 10 ரூபாய் கட்டணம் என்று நடத்துநர் கூறினார். அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிருக்கான வெற்றிப் பயண பேருந்து திட்டத்தில் இலவசமாக நகர் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்து விட்டு மதுரையில் வசூல் வேட்டையில் போக்குவரத்து கழகம் இறங்கியுள்ளது இதுபெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பஸ்சில் ஏறி பயணம் செய்யும் வரை கட்டணம் வசூல் என்று சொல்லாமல் அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிருக்கு இலவச பயண திட்டம் என்று எதற்கு அறிவித்தார்கள் என்று பெண்கள் கேள்வி எழுப்பினர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *