இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி!

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தேவா உடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு ஆறுதல் கூறினார். மேலும், தேவா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா அவர்கள் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட பலர் தேவா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *