சமையல் எரிவாயு விலை அதிரடி உயர்வு: வியாபாரிகள் அதிர்ச்சி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: வியாபாரிகள் அதிர்ச்சி

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 66.50 உயர்த்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த மாதம் (அக்டோபர்) முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் வணிக சிலிண்டர் தற்போது 2,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *