ஜெம் வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் தொடர்பான போக்சோ வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹதொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் தொடர்பான போக்சோ வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணியிடம் புழல் சிறையிலேயே போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது வீரமணியின் நெருங்கிய உதவியாளராக இருந்த கணேசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஜெம் வீரமணி தொடர்பான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே போல ஜெம் வீரமணியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் இருப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவுகள் இருப்பதாகவும், அந்த தொகை சுமார் 70 கோடி ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஊட்டியில் இருந்ததாக கூறப்படும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்று பணம் திரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவை அமைக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், சென்னை காவல் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏடிஜிபி அருண், கோவை மாநகர காவல் ஆணையர் (ஐஜிபி) என். கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *