
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.
தமிழ் வழியில் திட்டமதிப்பீடு
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில், ” நெடுஞ்சாலைத் துறையில் சாலைகள் பாலங்கள் பணிகளை திட்ட மதிப்பீடு தயாரிக்க ஆங்கில மொழி மட்டுமே இதுவரைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழியிலும் திட்ட மதிப்பீடு தயாரிக்க தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால்,இந்த கோரிக்கையை ஆண்டு கணக்காக தமிழக அரசு பரிசீலனை செய்யாமல் இருந்தது. இந் நிலையில் சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 2025 பரிசீலித்து உத்தரவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது. இந்த உத்தரவு நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் அவர்களுக்கு கடந்த மே 2025-ல் சார்பும் செய்யப்பட்டுள்ளது ஆனாலும் இன்று வரை நெடுஞ்சாலைத்துறையில் திட்ட மதிப்பீடு தமிழ் வழியில் தயாரிக்க பொறியாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, வேறு வழி இல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சங்கம் முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.



