
ஆர்.நல்லகண்ணு
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு வயோதிகம் மற்றும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த சில நாள்களாக பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
அவரின் உடல்நிலை கடந்த இரண்டு நாள்களாக பின்னடைவை சந்தித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 23) இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று (பிப்ரவரி 24) செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. மருத்துவர்கள் அருகிலிருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்து வருகிறார்கள். மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இயற்கை அவரிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது” என்றார்.



