
டிரோன்கள்
மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ளதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டேலா நகர் ரிங்ரோடு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நாளை ( மார்ச் 1) மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விமான நிலையத்திலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் 3 வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.



