நாளை முதல் புதிய தொடர் ஆரம்பம்…ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’

ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’

தமிழகத்தின் முன்னணி படைப்பாளியான விருதுநகர் ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’ தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது.

தமிழ் ஊடக உலகில் மாற்று ஊடகமாக மலர்ந்துள்ள மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளம், செய்தி ஊடகம் என்ற தளத்தை தாண்டி இலக்கிய மணம் பரப்பும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புகள் நாளை (மார்ச் 1) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும்.

அந்த வகையில், தமிழகத்தின் முன்னணி படைப்பாளியான விருதுநகர் ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’ தொடர் மதுரை செய்தி (maduraiseithi.in) இணையத்தில் நாளை துவங்குகிறது. தடம் பதித்த தமிழ் சிறுகதைகளைக் கொண்டாடும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த தொடர் இனி ஒவ்வொரு வாரம் -ஞாயிற்றுக்கிழமை வெளிவருகிறது. தமிழ் சிறுகதை உலகின் பிதாமகன்களைக் கொண்டாடும் இந்த தொடரில் முதல் சிறுகதை எது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு நாளை வரை வாசகர்கள் காத்திருங்கள்.

இப்போதே பகிருங்கள்

2 Comments

  1. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் சிறப்புடன் தொடர வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *