
ச.சுப்பாராவ் எழுதும் ‘நினைவே சங்கீதம் தொடர்.
எழுத்தாளர் ச.சுப்பாராவ் எழுதும் ‘நினைவே சங்கீதம்’ எனும் இசைத்தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை துவங்குகிறது.
தமிழ் ஊடக உலகில் மாற்று ஊடகமாக மலர்ந்துள்ள மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளம், செய்தி ஊடகம் என்ற தளத்தை தாண்டி இலக்கிய மணம் பரப்பும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புகளோடு நாளை (மார்ச் 1) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும்.
அந்த வகையில் தமிழகத்தின் மிக முக்கிய படைப்பாளியான ச.சுப்பாராவ் எழுதும் ‘நினைவே சங்கீதம்’ என்ற இசைத்தொடர் மதுரை செய்தி இணையத்தில் நாளை (மார்ச் 1) துவங்குகிறது. தமிழ் திரையிசை கொண்டாடும் இந்த தொடர் இனி ஒவ்வொரு வாரம் -ஞாயிற்றுக்கிழமை வெளிவருகிறது. தமிழ் திரையிசை ரசிகர்களைக் கவரும் வகையில் இந்த தொடர் வெளியாகிறது.



