
ஏதோ ஒன்று…
ஏதோ ஒரு தேடுதலின் நூலிழை பிசகு..
ஏதோ ஒரு புள்ளியின் கோணத்தில் கவனச்சிதறல்..
ஏதோ ஒரு நாளில் சொன்ன வார்த்தையின் ஊசிமுனை..
ஏதோ ஒரு நொடியில் தட்டிவிடப்பட்ட விரல் நுனி..
ஏதோ ஒரு வேகத்தில் முறுக்கிக்கொண்ட தோழமை..
ஏதோ ஒன்று என்பதற்குள் தொக்கி நிற்பதெல்லாமே..
நான் மட்டுமல்ல நானும் நீயுமே..
யார் முதலில் நெருங்குவது என்பதிலல்ல போட்டி..
நான் எனும் சுவரை யார் உடைப்பது என்ற போராட்டத்தில்..
ரயில் தண்டவாளம் போல சதா இணைந்திருந்தாலும் ..
பிரிந்து கிடக்கிறது நாமெனும் சொற்றொடர்.
– கமலி ஆனந்த்



