அதிரடியாக உயர்ந்தது கியாஸ் சிலிண்டர் விலை!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே, எரிவாயு சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 50 ரூபாய் உயர்ந்த நிலையில் இம்மாதமும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 868.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *