
நிலா.
இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) மாலை நிகழ உள்ளது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே ரத்த நிலவு என்று இது அழைக்கப்படுகிறது. முழு கிரகண நிலை சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். இது இந்திய நேரப்படி மாலை வேளையில் நிகழ்கிறது. மாலை 4:58 மணிக்கு தொடங்கும் நிழல் கிரகணம் முழு கிரகணமாக மாறும். மாலை 5:32 க்கு முழு கிரகணம் முடிவுக்கு வரும். இரவு 7:53 மணிக்கு கிரகணம் முழுவதுமாக முடிவுக்கு வரும்.
இந்தியாவில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் தொடங்கிவிடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தின் இறுதி நிலையை மட்டுமே காண முடியும். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சந்திர கிரகணகத்தின் காட்சி முழுமையாக தெரியும். இங்கு மாலை 5:10 முதல் 5:25 மணிக்குள் கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையைத் தெளிவாகக் காணலாம்.
சென்னை, பெங்களூரு, மும்பை,டெல்லி போன்ற நகரங்களில் மாலை 6:20 முதல் 6:30 மணிக்குள் ஓரளவு கிரகணம் தெரியும். சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்குச் சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. கிரகணத்தை முன்ன்ட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ளன.



