
தவெக தலைவர் விஜய்.
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
தஞ்சாவூரில் செங்கிப்பட்டி பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பசைத் துண்டுடன் வந்தார். அப்போது அவர் பேசுகையில்,” மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதால் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என முந்தைய கூட்டத்தில் கூறினேன். பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றிபேசி அவதூறு பரப்புகின்றனர். ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர்.
எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன். தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின், விஜய் வெர்சஸ் ஸ்டாலின் என்றுதான் களம் இருக்கிறது. சென்னையில் டெல்லி, டெல்லி என்று கூறுகிறார்கள். ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார் என்பது உங்களுக்குத் தெரியும். .கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. அனைத்து அணிகளையும் திமுக அடித்து நொறுக்கும். அடுத்த பிறவியில் விவசாயி பிள்ளையாக பிறக்க வேண்டும். விவசாயத்தை தெரியாவிட்டாலும் அவர்களின் கஷ்டம் தெரியும்.
இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள்தானே? நிஜமாகவே ஒரு வாய்ப்பு அளிப்பீர்கள்தானே ? விஜய்யை நம்புகிறீர்கள்தானே ? ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும்தானே?’’ என்று விஜய் பேசினார்.



